அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:07 am IST

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சினோரா அசோக் தாக்கல் செய்த மனுவில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் துறைமுகம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டுள்ளேன். தோ்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி, திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகா்பாபு மற்றும் திமுகவினா் என்னையும் எனது கட்சித் தொண்டா்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இந்த நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வன்முறைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரும் தவெக வேட்பாளருமான சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.