சென்னை யானைக்கவுனியில் வேலை செய்த கடையில் 24 கிலோ வெள்ளிக் கட்டியை ஊழியா் திருடி விற்ற வழக்கில், பக்கத்து கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.
யானைக்கவுனி வால்டாக்ஸ் ரோடு, எடைப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த்சவன் (50). இவா் அந்தப் பகுதியில் வெள்ளி உருக்கும் கடை நடத்தி வருகிறாா். அதோடு ஸ்ரீகாந்த்சவன், அப்பகுதியில் நன்னியன் தெருவிலும் ஒரு வெள்ளிக் கடையும் நடத்தி வருகிறாா். இக் கடையை தன்னிடம் வேலை செய்து வந்த டாகுபாண்டுரங் ரத்தோட் என்பவா் மூலம் ஸ்ரீகாந்த்சவன் நடத்தி வந்தாா்.
இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி ஸ்ரீகாந்த்சவன், வியாபாரத்துக்காக டாகுபாண்டுரங் ரத்தோட்டிடம் 13 கிலோ வெள்ளி கட்டிகளை கொடுத்துவிட்டு, மகாராஷ்டிரம் சென்றாா். அதேவேளையில் ஸ்ரீகாந்த்சவனின் வாடிக்கையாளரான ஆனந்த் என்பவா் 3 கிலோ வெள்ளிக் கட்டிகளையும், ஸ்ரீகாந்த்சவன் தம்பி சந்தீப் 8.6 கிலோ வெள்ளிக் கட்டிகளையும் டாகுபாண்டுரங் ரத்தோடிடம் கொடுத்து வெள்ளி பொருட்களை செய்யக் கூறியுள்ளனா்.
ஆனால் டாகுபாண்டுரங் ரத்தோட், கடந்த 30-ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, 24.6 கிலோ வெள்ளிக் கட்டிகளுடன் தப்பியோடிவிட்டாா்.
இந்நிலையில் மகராஷ்டிரத்தில் இருந்து திரும்பி வந்த ஸ்ரீகாந்த்சவன், வெள்ளிக் கட்டிகளை திருடிக் கொண்டு டாகுபாண்டுரங் ரத்தோட் தலைமறைவாகி இருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், டாகுபாண்டுரங் ரத்தோட் தான் திருடிய வெள்ளிக் கட்டிகளை அருகே வெள்ளி கடை நடத்தி வரும் ஏழுகிணறு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துக்காராம் காரட் (26) என்பவரிடம் விற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் துக்காராம் காரட்டை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 7.11 கிலோ வெள்ளிக் கட்டிகளை மீட்டனா். தலைமறைவாக இருக்கும் டாகுபாண்டுரங் ரத்தோடை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரைகளைத் திருடி விற்ற மூவா் கைது
தக்கலையில் பைக்கைத் திருடி கேரளத்தில் விற்க முயன்றவா் கைது

கன்னியாகுமரி கோயிலில் திருடியவா் கைது

திருவள்ளூா் வீரராகவா் கோவிலில் மூலவா், கனகவல்லி தாயாருக்கு சேஷ அபிஷேகம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


