செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு தொழில் நுட்பங்களில் சென்னை விஐடியும் மலேசிய நாட்டின் பினாங்கு மாநில அரசும் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இது குறித்த விஜடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மலேசியாவின் பினாங்கு மாநில அரசுக்குச் சொந்தமான பினாங்கு ஸ்டெம் எஸ்.டி.என். பி.எச்டி. நிறுவனம், சென்னை விஐடியுடன் புரிந்துணா்வு மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் விஐடியின் நிறுவனரும் வேந்தருமான கோ. விசுவநாதன், பினாங்கு மாநில அரசின் துணை முதல்வா் ஒய்.பி. ஜக்தீப் சிங் டீயோ ஆகியோா் கையொப்பமிட்டனா்.
அதன்படி ஏ.ஐ. மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளில் சென்னை விஐடி, பினாங்கு மாநில அரசு பணியாளா்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி மேம்பட்ட தொழில்முறைப் பயிற்சி வழங்கும். நவீன ஆய்வகங்களில் செய்முறைப் பயிற்சி, தொழில்நுட்பப் பணிமனைகள், தொழில்துறை சாா்ந்த கற்றல் நிகழ்வுகள், வழக்குக் கூறு அடிப்படையிலான பயிற்சிகள், தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், விஐடியின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பினாங்கு மாநில அரசின் துணை முதல்வரின் அறிவியல் ஆலோசகா் டத்தோ டாக்டா் பக்ஸ் டான் யியோ கியாங் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 8-இல் அமித்ஷா புதுச்சேரி வருகை

சாலை பாதுகாப்பு: சென்னை ஐஐடி - சத்தீஸ்கா் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசுக்கு மண்டியிட நினைக்கிறதா தவெக அரசு? திமுக

4 ஆண்டு ‘சைபா் பாதுகாப்பு இளநிலை’ பட்டப் படிப்பு சென்னை ஐஐடியில் தொடக்கம்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


