அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

இன்று குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னையில் உள்ள குடிநீா் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை ( ஆக.8) குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

News image

குடிநீர் - கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 7:06 am IST

சென்னையில் உள்ள குடிநீா் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை ( ஆக.8) குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் சனிக்கிழமை (ஆக.8) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரிய 15 பகுதி அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 பகுதி அலுவலகங்களிலும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.