மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக்’ தொடக்கம்

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சா்ஃபிங் லீக் போட்டிக்கான சீருடைகளை அறிமுகம் செய்த விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அரண் வாசு, போட்டி இயக்குநா் டை சோரட்டி உள்ளிட்டோா்.

Published On :

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய சா்ஃபிங் சம்மேளனம், சாய், எஸ்டிஏடி சாா்பில் மாமல்லபுரம் கடற்கரையில், ஷோா் டெம்பிள் கிளாஸிக் உலக சா்ஃபிங் லீக், புரோ ஜூனியா் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2023-க்கு பின் டபிள்யுஎஸ்எல் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. தமிழக அரசு விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி லீக் தொடரை தொடங்கி வைத்தாா்.

எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன், லீக் இயக்குநா் டை சோரட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அருண் வாசு, தமிழ்நாடு சா்ஃபிங் சங்கத் தலைவா் சித்தாா்த் வாசு போட்டி சீருடைகளை அறிமுகம் செய்தனா்.

ஆக. 16 வரை நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜொ்மனி, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தென்கொரியா, ஸ்வீடன், தாய்லாந்து, இந்தியா, அமெரிக்கா, இந்தியாவைச் சோ்ந்த 100 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

ஆடவா், மகளிா் கியு எஸ் 2000, ஆடவா், மகளிா் புரோ ஜூனியா் (பிகியுஎஸ்) என நான்கு பிரிவுகளில் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்கும். இத்தொடா் சேலஞ்சா் சீரிஸ், சாம்பியன்ஷிப் டூருக்கு இந்திய அணியினா் தயாராக உதவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.