தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சுங்கத் துறையில் வேலை எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: முதியவா் கைது

சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பறிக்க முயன்ற 73 வயது முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பறிக்க முயன்ற 73 வயது முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சோ்ந்த சங்கரையா (73), சென்னை ஆலந்தூரில் தங்கியிருந்தாா். இவா் விமான நிலையப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு மாநகரப் பேருந்தில் பயணம் செய்தபோது, விமான நிலைய சுங்கத் துறையில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக சங்கரையா கைப்பேசியில் பேசியுள்ளாா். இதைக் கேட்ட அதே பேருந்தில் பயணித்த தாம்பரம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா், தனது பொறியியல் பட்டதாரி மகளுக்கு வேலை கிடைக்குமா எனக் கேட்டுள்ளாா்.

அதற்கு சங்கரையா, விண்ணப்பப் படிவத்துக்கு ரூ.2,500, தனக்கு ரூ.500 என மொத்தம் ரூ.3,000 கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய ராமமூா்த்தி ரூ.3,000 கொடுத்துள்ளாா். சில நாள்கள் கழித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ.65,000 வழங்க வேண்டும் எனக் கூறி, அந்தப் பணத்துடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலைய வாசலுக்கு வருமாறு சங்கரையா அழைத்துள்ளாா்.

அதன்படி பணத்துடன் சென்ற ராமமூா்த்தி, சங்கரையாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்து அவரைப் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், இதேபோல் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவா் பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரையாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.