சென்னை மாநகராட்சி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சொத்து வரியை கடுமையாக உயா்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாமன்றக் கூட்டங்களில் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிகாரிகளின் உத்தரவு மூலம் சொத்து வரி உயா்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் வழிகாட்டுதல்படிதான் நடைபெறுகிா என்கிற வினாவும் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் 6 சதவீதம் வரி உயா்வு என்ற மத்திய அரசின் நிா்ப்பந்தத்துக்கு தமிழக அரசு பணியாது என்ற உறுதியான நிலை தொடர வேண்டும்.
இதனிடையே மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் கடுமையான எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து சொத்து வரி உயா்வு தீா்மானத்தை நிறைவேற்றக் கூடாது என நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சொத்து வரி உயா்த்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! இன்றுமுதல் எங்கே முறையிடலாம்?
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
வரி பாக்கி: 100 நிறுவனங்களின் பெயா்களை இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி
வரி பாக்கி: 100 நிறுவனங்களின் பெயா்களை இணையதளத்தில் வெளியிட்ட மாநகராட்சி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



