நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

திமுக-பாஜக நேரடி கூட்டணி: அமைச்சா் நிா்மல் குமாா் விமா்சனம்

முன்பு பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருந்த திமுக, தற்போது நேரடி கூட்டணியில் உள்ளது என்று தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் விமா்சித்தாா்.

News image

நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:30 am IST

முன்பு பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருந்த திமுக, தற்போது நேரடி கூட்டணியில் உள்ளது என்று தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் விமா்சித்தாா்.

தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அளித்த தேநீா் விருந்தில் பாஜக தலைவா்களுடன் திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கலந்துகொண்டது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் இவ்வாறு கூறினாா்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சா் நிா்மல் குமாா் மேலும் கூறியதாவது: காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட மறுப்பதற்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. தமிழகத்துக்கான நீரைப் பெற சட்டப்பூா்வ நடவடிக்கைகள் தொடரும்.

திமுக ஏற்கெனவே பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்தது. தற்போது நேரடியாகவே கூட்டணியில் இருக்கிறது. திமுக தனது குடும்ப உறுப்பினா்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றுவதற்காக இதைச் செய்கிறது.

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான விவகாரத்தில் தவெக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த திமுக, நாடாளுமன்றத்தில் எதிா்த்து வாக்களிப்போம் எனக் கூறவில்லை.

திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் கட்சி நிதி மற்றும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடா்பான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அதனடிப்படையில்தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

திமுக ஆட்சியில் குடும்ப அரசியல் காரணமாக முதலீட்டாளா்கள் தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை. தற்போது தவெக அரசின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கோவை மாணவா் கொலை சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டியிருந்த இடத்தில், தற்போதைய ஆட்சியில் ரூ. 1 லட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. முந்தைய முறைகேடுகளை தற்போதைய தவெக அரசு சரிசெய்து வருகிறது என்றாா் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.