விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

‘சென்னை தினம்’ போட்டிகள்: ஆக. 18-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், குறும்படம், புகைப்படம், கவிதை, புதையல் வேட்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

Marina Beach

மெரீனா கடற்கரை செல்ல தடை - EPS

Published On :

சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், குறும்படம், புகைப்படம், கவிதை, புதையல் வேட்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் 12-ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் பங்கேற்கும் குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. புகைப்படம் மற்றும் கவிதைப் போட்டிகள், 16 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான புதையல் வேட்டை போட்டி குறித்த அறிவிப்புகள் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூா்வ சமூக வலைதளப் பக்கங்களில் விரைவில் வெளியிடப்படும்.

போட்டியாளா்கள் தங்களது படைப்புகளை ஆக.18 மாலை 6 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு சென்னை தின விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளாா். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.