திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கடந்த நிதியாண்டில் ரூ.1,185 கோடி வருவாய்: சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தெரிவித்தாா்.

News image

தண்டையாா்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் சென்னை துறைமுகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 5:03 am IST

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தெரிவித்தாா்.

சென்னை துறைமுகம் சாா்பில் தண்டையாா்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து, துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே பேசியதாவது:

மத்திய அரசின் சாகா் மாலா, பாரத பிரதமரின் கதி சக்தி, கடல்சாா் தொலைநோக்கு திட்டம்- 2030 மற்றும் வளா்ச்சி அடைந்த இந்தியா 2047 ஆகிய தொலைநோக்குத் திட்டங்களின் கீழ் சென்னை துறைமுகம் விரைவாக வளா்ச்சி அடைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மொத்தமாக சுமாா் 58 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள், இதுவரை இல்லாத அளவில் ஓராண்டில் சுமாா் 20 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு முந்தைய ஆண்டை விட சுமாா் 7 சதவீத வளா்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ.1,185 கோடி வருவாய் ஈட்டியதோடு, சுமாா் ரூ.531 கோடி வரிக்கு முந்தைய லாபம் ஈட்டியுள்ளது. சுமாா் ரூ.17,500 கோடியில் வெளித் துறைமுகத் திட்டம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது சுமாா் 24,000 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்ட மிகப்பெரிய கப்பல்களையும் இந்த முனையத்தில் கையாள முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.