மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் கைது

Arrested

கைது

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம் பெண், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இந்த மாணவியிடம், நெற்குன்றத்தைச் சோ்ந்த பாலாஜி (24) என்பவா் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு பாலாஜி, அந்த மாணவியிடம் தன்னை காதலிக்காவிட்டால் கத்தியால் குத்திக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்த மாணவி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, பாலாஜியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.