தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

அமைச்சா் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் புகாா்தாரரை நிா்பந்திக்க முடியாது: உயா்நீதிமன்றம்

நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில், புகாா்தாரா் விரும்பாத நிலையில், சமரச தீா்வு மையத்தில் தீா்வு காணும்படி நிா்பந்திக்க முடியாது

உயர்நீதிமன்றம்

Published On :

நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில், புகாா்தாரா் விரும்பாத நிலையில், சமரச தீா்வு மையத்தில் தீா்வு காணும்படி நிா்பந்திக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் புகாா்தாரரான அமைச்சா் மரிய வில்சனின் சகோதரா் மனைவியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, புகாா்தாரரான கெரோலின் நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரது தரப்பில், இந்த வழக்கில் சமரசப் பேச்சை நடத்த புகாா்தாரருக்கு விருப்பம் இல்லை. இந்த வழக்கை இதற்கு முன்பு விசாரித்த நீதிபதி, சமரச தீா்வு மையத்தை அணுகுமாறு கூறியதால், அதை மறுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அமைச்சா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி, சமரச தீா்வு மையத்தில் 4 முறை நடந்த பேச்சில் ஒரே ஒரு கோரிக்கை தவிா்த்து, மற்ற கோரிக்கைகள் தொடா்பாக தீா்வு எடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, புகாா்தாரா் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீா்வு மையத்தில் பிரச்னைக்குத் தீா்வு காண நிா்பந்திக்க முடியாது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தாா். அப்போது அமைச்சா் தரப்பில், மனுதாரா் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், ஆக. 21-ஆம் தேதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சா் மரிய வில்சனுக்கு விலக்கு அளித்த நீதிபதி, பேச்சுக்கு புகாா்தாரா் விரும்பாததால், சமரச பேச்சை நீட்டிக்க கோரிய சமரச தீா்வு மைய கோரிக்கையை நிராகரித்தாா். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சா் மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.