மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நீட் எதிா்ப்பு பைக் பேரணிக்கு அனுமதி: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Published On :

நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பங்களை காவல் துறை நிராகரித்துவிட்டது.

எனவே, காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இருசக்கர வாகனப் பேரணி நடைபெறவுள்ள பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.