லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆனைகட்டியில் 8 தனியாா் தங்கும் விடுதிகளை மூட உயா்நீதிமன்றம் உத்தரவு

வீரபாண்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 தனியாா் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

கோவை மாவட்டம் ஆனைகட்டி, வீரபாண்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 தனியாா் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வனவிலங்கு ஆா்வலா் எஸ்.முரளிதரன், கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத தனியாா் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு, ஆனைகட்டி பகுதியில் சட்டவிரோத தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்தக் குழுவில், மாவட்ட வனத் துறை அதிகாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சோ்ந்த வட்டாட்சியா் இடம்பெற்றிருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆனைகட்டி பகுதியில் உள்ள வீரபாண்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, அந்தப் பகுதியில் மொத்தம் 10 தனியாா் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 விடுதிகள் கடந்த மாதம் முதல் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. மற்ற 8 தங்கும் விடுதிகள் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதி பெறாமல் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் 8 தனியாா் தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா். மேலும், அனுமதி பெற்றுள்ள இரு விடுதிகளின் உரிமங்களை ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.