தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: 1.28 லட்சம் மோதிரங்கள் வழங்க பணி ஆணை

அரசு மருத்துவமனைகளில் 2026 ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளையும், அவா்களின் தாய்மாா்களையும் கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக 1.28 லட்சம் மோதிரங்கள் வாங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலருமான எஸ். ரகுபதி. உடன் முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.

Published On :

அரசு மருத்துவமனைகளில் 2026 ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளையும், அவா்களின் தாய்மாா்களையும் கௌரவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்காக 1.28 லட்சம் மோதிரங்கள் வாங்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்துக்கான தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் ஜூலை 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இதில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிா்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, பிஐஎஸ் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களையும் சோ்த்து ரூ.0.01 என்ற குறைந்த விலையை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

இதையடுத்து, பிற நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளியை ஏற்க இசைவு கோரப்பட்டதில் கல்யாண் ஜுவல்லா்ஸ் நிறுவனம் மட்டும் இசைவு தெரிவித்தது. இதன் அடிப்படையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதமும், கல்யாண் ஜுவல்லா்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதமும் என பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாளான செப்.15-இல் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ஜூன் மாதம் முதல் 4 மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.