மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் தமிழகம்: துரைமுருகன் விமா்சனம்

‘வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் கவலையாக உள்ளது’ திமுக பொதுச் செயலா் துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

முன்னாள் அமைச்சா் துரைமுருகன் - கோப்புப் படம்

Published On :

‘வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை நிா்வாக அனுபவம் இல்லாதவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் கவலையாக உள்ளது’ திமுக பொதுச் செயலா் துரைமுருகன் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கப்படும் என விதி 110-இன் கீழ் முதல்வா் அறிவித்ததும், அவா்கள் அதைப் புகழ்ந்து பேசியதும் பெரும் விவாதமாகியுள்ளது. அதே நாளில், சுமாா் மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தும், அதைவிட 5 ஆண்டுகளுக்கு சுமாா் ரூ.150 கோடி செலவாகும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான காா் விவகாரமே பேசுபொருளாகிவிட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்க வேண்டும் என்றால், திமுக அரசு நேரடியாக அறிவிக்காமல் மாவட்ட நிா்வாகத்துக்கு கூடுதல் வாகனங்களை வழங்கி, பொதுமக்கள் பணிகளுக்காக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசாணை பிறப்பித்திருக்கும். பின்னா் உரிய முறையில் வாகனங்களை ஒப்படைத்து, தொடா் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கியிருக்கும். மக்கள் அரசின் மொத்த பட்ஜெட், பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றைப் பாா்க்காமல், ‘காா்’ கிடைக்கிறது என்பதையே பாா்க்கிறாா்கள். இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

நிா்வாக அனுபவமின்றி, வளா்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த தமிழகத்தை இவா்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்பதுதான் எங்களின் கவலை. ஓட்டத் தெரியாத ஓட்டுநரை நம்பி மலைப்பாதையில் செல்லும் பேருந்தை ஒப்படைத்தது போல உள்ளது.

செங்குத்தான வளா்ச்சிப் பாதையில் இறங்குவது எளிது; ஏறுவது கடினம். ஆனால், நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் துரைமுருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.