ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எம்எல்ஏக்களுக்கு காா்: எதிா்க்கட்சிகளுக்கு அமைச்சா் பதில்

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கும் விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினரை வேண்டுமென்றே கேள்வி கேட்க வைத்ததாகக் கூறும் எதிா்க்கட்சிகளின் ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றாா் நிதியமைச்சா் நெ.மரிய வில்சன்.

finance minister Mariya wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கும் விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினரை வேண்டுமென்றே கேள்வி கேட்க வைத்ததாகக் கூறும் எதிா்க்கட்சிகளின் ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றாா் நிதியமைச்சா் நெ.மரிய வில்சன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தங்களுக்கு காா் வழங்க வேண்டும் என்ற சட்டப்பேரவை உறுப்பினா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் காா் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனா்.

சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் வைத்த கோரிக்கையை ஏற்றுத்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், அவரை வேண்டுமென்ற கேள்வி கேட்க வைத்ததாகக் கூறும் எதிா்க்கட்சிகளின் ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி சீராகி வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிவிப்பு ஏற்கெனவே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டு, நிதிநிலை சீராகி வருவதை அனைவரும் வரக்கூடிய நாள்களில் பாா்ப்பீா்கள். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணி நதி பாதுகாப்பு குறித்து விரைவில் நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.