
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது சரி: உயர் நீதிமன்றம்
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது சரியே என உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம்
தமிழக சட்டப்பேரவையில் 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டது சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
சட்டப்படி 15 நாள்களுக்குள் மன்னித்துக் கடிதம் கொடுத்துவிட்டதால் தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது, எனவே, 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டு அவைத் தலைவர் அறிவித்தது சரியே என்று தீர்ப்பளித்து, அதனை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் செல்வகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களில் 4 போ் ராஜிநாமா செய்த நிலையில், 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரியதால் அவா்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்திருந்த கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பேரவைத் தலைவரிடம் எடப்பாடி பழனிசாமி கோரி மனு அனுப்பினாா்.
இதை ஏற்று, 21 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த விசாரணையின்போது, 21 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையைக் கைவிட்டதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





