புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

73,000 வழக்குகளை விசாரிக்க 12 நீதிபதிகள்: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் பற்றாக்குறை!

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை பற்றி...

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்

Published On :

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் அங்கு 106% வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 73,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 22 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை விட குறைவாக, தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா உள்பட 13 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். நீதிபதிகள் சஞ்சய் எஸ். அகர்வால் மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் ஓய்வு பெறுவதால், இந்த மாதம் நீதிபதிகளின் எண்ணிக்கை மேலும் குறையும்.

ஒடிசாவிலிருந்து இடமாற்றம் பெற்று நீதிபதி கிருஷ்ண ராம் மொஹபத்ரா நீதிமன்றத்தில் இணையவுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 12-ஆகவும், காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 10-ஆகவும் இருக்கும்.

தலைமை நீதிபதியாக சின்ஹா பொறுப்பேற்றது முதல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முன்னுரிமை அளித்து வருகிறார். 2026 ஜனவரி 1 அன்று 75,667 வழக்குகள் நிலுவையில் இருந்தன. பின்னர் 7 மாதங்களில் 30,831 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், ஜூலை 27 நிலவரப்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 73,751-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையில் 2.53% குறைக்கப்பட்டும், 106.21% தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்குகளை விட அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாகத் தொடரும் பிரச்னையாக உள்ளது. நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டுகளில், அனுமதிக்கப்பட்ட 6 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்தனர். மார்ச் 2005 ஆம் ஆண்டில், அப்போதைய தலைமை நீதிபதி ஏ.கே. பட்நாயக் கூடுதல் பணியிடங்களைப் பெற உதவினார். இதனால் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

தலைமை நீதிபதி பட்நாயக் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, நவம்பர் 2005-இல் தலைமை நீதிபதியாக எஸ்.ஆர். நாயக் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்த்தப்பட்டது.

பின்னர் இந்த எண்ணிக்கை 22-ஆக உயர்த்தப்பட்டாலும், இடமாற்றம் மற்றும் ஓய்வு காரணமாக ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப புதிய நீதிபதிகளை நியமிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது.

ஓய்வு பெறும் நீதிபதிகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட காலத்தில் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது.

நீதிபதிகளை நியமிப்பது மட்டுமின்றி, பணியிடங்கள் நீண்டகாலத்திற்கு காலியாக இருப்பதைத் தவிர்க்கவும், வழக்குகளுக்கான தீர்ப்பு வழங்கப்படுவதை விரைவுபடுத்தவும், ஓய்வு பெறவிருக்கும் நீதிபதிகளுக்கு இணையாக புதிய நியமன நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Summary

12 judges to hear 73,000 cases: Shortage at Chhattisgarh High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.