சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

News image

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On :29 ஜூலை 2026, 8:46 am IST

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்புமனு தகவல்கள் தொடர்பான வழக்கு, துணைவேந்தர்கள் நியமன வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வருகின்றன.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி ஆந்திரத்தைச் சேர்ந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது

தமிழகத்தில் 15 பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் உயர்கல்வி செயல்பாடுகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பு மனுவில், திமுக அறக்கட்டளைத் தலைவராக இருந்ததை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தகவல்கள் குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீடு கோரிய வழக்கும் இன்று காலை விசாரிக்கப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரி அருண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி யூடியூபர் வாராகி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.

Summary

Key cases, including the one concerning the nomination details of former Chief Minister and DMK leader M.K. Stalin and the case regarding the appointment of Vice-Chancellors, are coming up for hearing at the Madras High Court today (July 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.