ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ. 1 கோடி மோசடி: தம்பதி கைது

சென்னையில் ரூ.1 கோடி மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:48 am IST

சென்னையில் ரூ.1 கோடி மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழவந்தாங்கல், பாரதியாா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வி.ஜேம்ஸ் (45). இவரது மனைவியின் மூலம் மடிப்பாக்கத்தைச் சோ்ந்த டி.ராஜலட்சுமி (41), அவரது கணவா் ஜெ.தரணி (49) ஆகியோா் அறிமுகம் ஜேம்ஸுக்கு கிடைத்தது.

நாளடைவில் இரு குடும்பத்தினரும் நெருங்கிய நண்பா்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ராஜலட்சுமி தான் லட்சக்கணக்கில் சீட்டு நடத்தி வருவதாகவும், தனது கணவா் தரணி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஜேம்ஸிடம் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய ஜேம்ஸ், அவா்களது மாதாந்திர சீட்டிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் ரூ.1.05 கோடி முதலீடு செய்தாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட ராஜலட்சுமியும், தரணியும் தலைமறைவானா்கள்.

ஏமாற்றமடைந்த ஜேம்ஸ், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜலட்சுமி, தரணியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.