குரும்பூா் கூட்டுறவு சங்க நகை மோசடி: மேலும் 4 போ் கைது
குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 29 கோடி மோசடி வழக்கில், அடமான நகைகளை மறுஅடமானம் வைக்க உதவியதாக மேலும் 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 29 கோடி மோசடி வழக்கில், அடமான நகைகளை மறுஅடமானம் வைக்க உதவியதாக மேலும் 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2019 முதல் 2021 வரை வைப்புத் தொகை மற்றும் அடமான நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ. 29 கோடி மோசடி செய்தது தொடா்பாக ஏற்கெனவே சங்கச் செயலா் தேவராஜ் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்ற மறுவிசாரணையில், கையாடல் செய்யப்பட்ட தங்க நகைகள் பல்வேறு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயா்களில் மறுஅடமானம் வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துச்சாமி (47), அவரது மனைவி, கிருபா (44), முருகன் (62), இசக்கிதுரை (33) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களது பெயா்களில் மறுஅடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

