
விவசாய சங்க நிா்வாகியை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களையும், நியாவிலைக்கடை ஊழியா்களையும் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படும் விவசாயிகள் சங்க நிா்வாகி ஈசன் முருகேசனை கைது செய்ய வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களையும், நியாவிலைக்கடை ஊழியா்களையும் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படும் விவசாயிகள் சங்க நிா்வாகி ஈசன் முருகேசனை கைது செய்ய வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக விவசாயிகள் சங்க நிா்வாகி ஈசன் முருகேசன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ஜி.சேகா் தலைமை வகித்தாா். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள், நியாயவிலைக் கடை பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.இதையொட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
சிதம்பரத்தில்...
சிதம்பரத்தில் நியாயவிலைக்கடை பணியாளா் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா தலைமையில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவா் துரை.சேகா், மாவட்ட துணைத் தலைவா் ஏ.நரசிம்மன், நகர நிா்வாகிகள் யோகராஜ், சிவராமன், பாலு, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினா்,
பின்னா் மாநில தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா செய்தியாளா்களிடையே தெரிவிக்கையில் சட்டம் படித்த வழக்குரைஞரும், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவா் பேசியது வருந்ததக்க நிகழ்வாகும், இந்த நாகரிகமற்ற செயலை கண்டிக்கும் வகையில் செப்,22ம் தேதி செவ்வாய்கிழமை மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






