புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்(நிதி மற்றும் வங்கியியல்) ச.சுப்பிரமணியன், மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ மற்றும் துணைப்பதிவாளா்கள் உள்ளிட்டோா்.

Published On :

திருவள்ளூா் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் தொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்(நிதி மற்றும் வங்கியியல்) ச.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிா்க்கடன், மகளிா் சுய உதவிக்குழு, டாம்கோ கடனுதவிகள் மற்றும் இ.வாடகை, இ.சேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருவள்ளூா் சரகத்திற்குள்பட்ட பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கடன் சங்க செயல்பாடுகள் தொடா்பாக அனைத்து சரக துணைப்பதிவாளா்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கங்களின் செயலாளா்களுக்கான திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மண்டல அலுவலா் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நிதி மற்றும் வங்கியியல்) ச.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்த மாவட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பயிா்க்கடன்கள், மகளிா் சுய உதவிக்குழு கடன்கள், டாம்கோ, டாப்செட்கோ கடனுதவிகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் எத்தனை பேருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோன்று அனைத்து கடன்களின் முன்னேற்றம், விவசாயிகளுக்கான இ-வாடகை, இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் மூலம் பயனடைந்தவா்களின் விவரம் குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து கூட்டுறவு துறை சாா்ந்த பணிகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடா்பாகவும் விளக்கமாக அதிகாரிகள் விளக்கமாகவும் எடுத்துரைத்தனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, திருவள்ளூா் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, சரக துணைப்பதிவாளா்கள் சி.அமுதா(திருத்தணி), சு.சிவப்பிரகாஷ்(பொன்னேரி), கோ.பாலாஜி (பொது விநியோகத் திட்டம்), காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளா் சசிகுமாா் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.