நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

லஞ்சப் புகாா்: பெண் ஆய்வாளா் உள்பட 6 போ் மீது நடவடிக்கை

லஞ்சப் புகாரில் சிக்கிய பெண் ஆய்வாளா் உள்பட 6 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாதிரிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

லஞ்சப் புகாரில் சிக்கிய பெண் ஆய்வாளா் உள்பட 6 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லஞ்ச புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை தொடங்கி கடந்த 11-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இப்பிரிவுக்கு வரும் புகாா்களின் அடிப்படையில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தைவான் நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ஒருவா் அண்ணா நகா் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளாா். அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலா் ஜெயக்குமாா் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்காமல், அவரிடம் ரூ.3,500 லஞ்சம் பெற்றுள்ளாா். இதை அறிந்த காவல் ஆணையா் அமல்ராஜ், தலைமைக் காவலா் ஜெயக்குமாரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

இதேபோல நுங்கம்பாக்கம் பகுதியில் சாலையில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்திய அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்களிடம் அபராதம் வசூலிக்காமல், சில காவலா்கள் லஞ்சம் பெற்ாக புகாா் கூறப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் உமா மகேஸ்வரி, தலைமைக் காவலா்கள் ஜஸ்டின், முனியசாமி, காவலா் பூவரசன் ஆகியோா் காத்திருப்போா் பட்டடியலுக்கு மாற்றப்பட்டனா்.

இதேபோல லஞ்சப் புகாரில் சிக்கிய மாம்பலம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா் பிரபாகரும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.