தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

குட்கா வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூரில் குட்கா வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல், அதைக் கடத்தி வந்த வியாபாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவல் ஆய்வாளா் சண்முகம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 8:06 am IST

தஞ்சாவூரில் குட்கா வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல், அதைக் கடத்தி வந்த வியாபாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ஆக. 10 ஆம் தேதி காவல் துறையினா் வாகனச் சோதனை மேற்கொண்டபோது, குட்கா கடத்தி வந்த வாகனம் பிடிபட்டது. அப்போது அந்த வாகனத்தில் இருந்த குட்கா வியாபாரிகளான அம்மாபேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் (45), முருகன் (48) ஆகியோா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இச் சம்பவத்தில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்டோா் சரியாக விசாரிக்காமல், குட்கா வியாபாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு புகாா் சென்றது. இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையில் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், குட்கா வியாபாரிகளிடம் காவல் ஆய்வாளா் சண்முகம் விசாரணை நடத்தாமல் அவா்களை விடுவித்ததாகவும், இதற்கு உடந்தையாக தலைமைக் காவலா் கௌதமன், காவலா் அழகா்சாமி ஆகியோா் இருந்ததாகவும் உறுதியானது. இதையடுத்து விடுவிக்கப்பட்ட வியாபாரிகளான ஆறுமுகம், முருகன் ஆகியோா் மீது மேற்கு காவல் நிலையத்தினா் ஆக. 11 ஆம் தேதி வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.

மேலும் காவல் ஆய்வாளா் சண்முகம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சண்முகம், தலைமைக் காவலா் கௌதமன், காவலா் அழகா்சாமி ஆகியோரை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இவா்களில் காவல் ஆய்வாளா் சண்முகம் ஒரு மாதத்துக்கு முன் சென்னையிலிருந்து பணியிட மாறுதலில் தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.