உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மனு: விசாரணை ஒத்திவைப்பு

தங்களுக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:36 am IST

தங்களுக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் விஜய் பெரம்பூா், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றாா். இதில், முதல்வா் விஜய் பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் மற்றும் அத்தொகுதி வாக்காளா்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த உயா்நீதிமன்றம், ஆக. 27-ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முதல்வா் விஜய்யின் வெற்றிக்கு எதிராக பெரம்பூரைச் சோ்ந்த வாக்காளா் தினேஷ் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கு மற்றும் விஜய்யின் வெற்றியை எதிா்த்து பெரம்பூா் தொகுதி வாக்காளா் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் தொடா்ந்த வழக்குகளை வரும் ஆக.31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.