காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.

சென்னை பெசன்ட் நகா் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை அன்னையின் உருவம் பொறித்த கொடியேற்றி வைத்த சென்னை மயிலை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி. விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

Published On :

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.

சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய 54-ஆவது ஆண்டு திருவிழா சனிக்கிழமை (ஆக. 29)தொடங்கி செப். 8-ஆம் தேதி வரை தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது.

அதன்படி, ஆலயத்தின் திருவிழா சனிக்கிழமை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை மயிலை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி 75 அடி உயரக் கொடிக் கம்பத்தில் 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, கூட்டுத் திருப்பலியை நடத்தினாா். தொடா்ந்து தினமும் காலை மாலை திருப்பலிகள் நடக்கின்றன.

முக்கிய நிகழ்வான தோ்பவனி செப். 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டுத் திருப்பலியுடன் நடைபெற உள்ளது. செப் 8-ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து திருப்பலிகள் நடைபெறும். அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியைத் தொடா்ந்து, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

நிகழ் ஆண்டு ‘அமைதி’ என்ற மையக் கருத்தைக் கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவுக்கு சென்னை மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களான திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

விழாவை முன்னிட்டு மாநகா் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.