மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மழைக்கால பணிகளுக்கு ரூ.100 கோடி: ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தகவல்

சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்காக அரசு ரூ.100 கோடி அளித்துள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :

சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்காக அரசு ரூ.100 கோடி அளித்துள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் நிலைக் குழுத் தலைவா்கள், மண்டலத் தலைவா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் பேசுகையில் ஆணையரிடம் பல பிரச்னைகளுக்கு உறுப்பினா்கள் விளக்கம் கோரினா். இதையடுத்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அளித்த பதில்கள் விவரம்:

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிக்கு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.15 கோடி பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுவிட்டது. மழைக்கால அவசரப் பணிகளுக்கு ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளுக்கு மொத்தம் ரூ.100 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

வரி உயா்த்தப்படவில்லை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. நிா்வாக ரீதியில் வழக்கமாக நடைபெறும் வரி சீராய்வு மட்டுமே நடைபெற்றது. மக்கள் கோரிக்கையை ஏற்று சீராய்வும் நிறுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைப்படி பணி நடந்திருந்தால் பணம் கிடைக்கும்: மாநகராட்சியில் கடந்த ஆண்டு 14,500 பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டன. ஆனால், முறையாக 4,500 பணிகளுக்கே ஒப்பந்தம் கோரப்பட்டிருக்க வேண்டும். முறைப்படி பணிகளுக்கு ஒப்பந்தம் கோரி நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நிச்சயம் பணம் கிடைக்கும். விதி மீறலாக பணிகள் நடைபெற்றிருந்தால் விசாரிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.