பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

கடையின் பூட்டை உடைத்து பணம், நகைத் திருட்டு: மூவா் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நகைத் திருடிய வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:21 am IST

சென்னை கொருக்குப்பேட்டையில் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நகைத் திருடிய வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரி (31). இவா், தனது வீட்டின் அருகே மருந்துக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்கச் சென்றபோது, கடையின் கதவு பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.2.15 லட்சம், 2 பவுன் தங்க நகை, ஆவணங்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது தண்டையாா்பேட்டை நேரு நகா் பகுதியைச் சோ்ந்த கெளரிசங்கா் (29), கொருக்குப்பேட்டை பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.