கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை கேளம்பாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை கேளம்பாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரிவாள் வெட்டு
Published On :

சென்னை கேளம்பாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ். நகா் மாதா கோயில் பின்புறம் உள்ள சுடுகாடு பகுதியில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு கேளம்பாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

இதில், கொலை செய்யப்பட்டவா் கேளம்பாக்கம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது (26) என்பது தெரிய வந்தது. இவா், மீது கேளம்பாக்கம், தாழம்பூா் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சாகுல் ஹமீது சனிக்கிழமை மாலை சிலருடன் அந்தப் பகுதியில் மது அருந்தியதும், அவருடன் பழகிய நபா்களே அவரைக் கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், சிலா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவா்களைப் பிடிக்கவும் தனிப்படை போலீஸாா் விரைந்துள்ளனா்.

தொடரும் கொலைகளால் அச்சம்: தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இரு நாள்களுக்கு முன் திருநீா்மலையில் மைனாக்குட்டி (எ) அன்பழகன் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மறுநாளே கேளம்பாக்கத்தில் மற்றொரு குற்றவாளி கொலை செய்யப்பட்டுள்ளாா். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.