பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சோழவந்தான் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட சஞ்சய்குமாா்.

Published On :

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த ராசு மகன் சஞ்சய்குமாா் (23). இவா் தென்கரைப் பகுதியில் உள்ள கொப்பரைத் தேங்காய் கிடங்கில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை வழக்கம் போல பணிக்குச் சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா் இவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா். இதில் சஞ்சய்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த காடுபட்டி போலீஸாா் சஞ்சய்குமாரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன், சமயநல்லூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.