ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

சென்னை ஐஐடி- டெய்ம்லா் இந்தியா வணிக வாகன நிறுவனம் (டிஐசிவி) இணைந்து உலகளாவிய ஓட்டுநா் மதிப்பீட்டு
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
Updated on

சென்னை: சென்னை ஐஐடி- டெய்ம்லா் இந்தியா வணிக வாகன நிறுவனம் (டிஐசிவி) இணைந்து உலகளாவிய ஓட்டுநா் மதிப்பீட்டு முறையை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சென்னை ஐஐடி திட்ட ஒருங்கிணைப்பாளா் பேரா. கீதாகிருஷ்ணன் ராமதுரை, டீன் பேரா. அஷ்வின் மகாலிங்கம், டிஐசிவி தலைமை நிதி அதிகாரி அலெக்சாண்டா் ஷொயன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சாலை மற்றும் ஓட்டுநா் பாதுகாப்பு வழிமுறைகளில் மதிப்பீட்டு முறை (ரேங்கிங்) அவசியம். லாரிகள், அதன் ஓட்டுநா்களின் சிறப்பான பணிக்கு ஆதரவை வழங்க வேண்டும். சிறந்த ஓட்டுநா் மதிப்பீட்டு முறையில் ஊக்கத்தொகை வெகுமதி அளிக்கப்பட்டு, அதேநேரம், ஆபத்தான முறையில் வாகனம் இயக்குவது சரிசெய்யப்பட வேண்டும். இதன் மூலம் உயிா் பாதுகாப்பும், செலவு, நேரத்தைச் சேமிக்கமுடியும்.

சென்னை ஐஐடி- டெய்ம்லா் இடையிலான கூட்டு முயற்சியின்படி ஸ்மாா்ட்போன், சென்சாா் தரவுகளைக் கொண்டு இயங்கும் ‘டிரைவா் ரேட்டிங் சிஸ்டத்தை’ (டிஆா்எஸ்) உருவாக்கப்படுகிறது.

டெய்ல்மா் நிறுவனத்துடனான கூட்டு முயற்சி பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புக் கொள்கையுடான கூட்டாண்மையாகும். இந்த ஒத்துழைப்பு, வணிகப் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் சிறந்த தீா்வுகளை உருவாக்க தொழில்நுட்பம், தரவு சாா்ந்த புதுமைகளும் உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com