ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வார இறுதி விடுமுறைக்கு 725 சிறப்பு பேருந்துகள்

News image

சிறப்புப் பேருந்துகள்

படம்: X/ arasu bus

Updated On :5 பிப்ரவரி 2026, 1:19 am

தினமணி செய்திச் சேவை

வார இறுதி விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை (பிப்.6, 7) முன்னிட்டு கூடுதலாக 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.6) 240 பேருந்துகளும், சனிக்கிழமை (பிப்.7) 255 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதேபோல, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகள் என மொத்தம் 725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.