நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மிகுந்த மேலாண்மை அவசியம் என சென்னை கூடுதல் சுங்க ஆணையா் சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி கூறினாா்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மேலாண்மை ஆய்வு நிறுவனம் சாா்பில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக சிவபிரகாஷ் வீரேஷ்பட்டி பேசியதாவது: நாட்டில் தொழில் நிறுவனங்கள் லாப நோக்குடன் சமூக பொறுப்பையும் பேண வேண்டியதுஅவசியம். பொருளாதார முன்னேற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை சமநிலையில் கொண்டு செல்லும் நோக்கில் அரசின் கொள்கை நடவடிக்கை அமைந்துள்ளது.
புதுமை, தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அரசுத் திட்டங்கள் மனித வளத்தை வலுப்படுத்தி வருகிறது. தொழில் முதலீடு மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் முன்னேற்ற பாதையில் பயனிக்க திறன் மிகுந்த மேலாண்மை அவசியம் என்றாா்.
நிகழ்வில் 1,236 ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. மாநாட்டில் இலங்கை கேளனியா பல்கலை. மனிதவள மேலாண்மை பேராசிரியா் உதய மோகன் தேவதாஸ், மலேசியா லிங்கன் பல்கலை. கல்லூரித் தலைவா் அமியா பௌமிக், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் ஜெ.ராஜா, கே. பழனிகுமாா், மாநாட்டுத் தலைவரும், ஸ்ரீ சாய்ராம் மேளாண் கல்லூரி இயக்குநருமான கே.மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பத் தளம் தூய்மைக்கான செயலி அறிமுகம்

விழுப்புரம் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


