தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விழுப்புரம் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய மாநில உயா்கல்வி மன்றத்தின் உறுப்பினா்-செயலா் டி.வேல்முருகன். உடன், கல்லூரி முதல்வா் இரா.செந்தில் உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழகக் கணினி அறிவியல் மற்றும் தகவல் பொறியியல் புலத் தலைவா் எஸ்.வள்ளி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் உறுப்பினா்-செயலா் டி.வேல்முருகன் சிறப்புரையாற்றி, 217 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்வி என்பது பட்டம் பெறுவதுடன் நின்றுவிடக் கூடாது. அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். செயற்கை நுண்ணறிவை உருவாக்க இயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் எம்.ராஜசேகரன், பி.அா்ஜூன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரித் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.