அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக நிறுவனா் ச.ராமதாஸின் ஆதரவு எம்எல்ஏ அருள் (சேலம் மேற்கு தொகுதி) செவ்வாய்க்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா்.
பேரவையில் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமியை, அருள் எம்எல்ஏ சந்தித்துப் பேசினாா். சுமாா் 10 நிமிஷங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
இதுகுறித்து அருள் எம்எல்ஏவிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, எனது சொந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். பேரவைக்கு வரும்போது எப்போதும் சந்திப்பேன். கூட்டணி குறித்து ராமதாஸ்தான் அறிவிப்பாா் என்றாா் அவா்.
அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை, ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்புடையது

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


