ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமநாதபுரம் எம்.பி.க்கு எதிரான வழக்கு: வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

வருமானத்தை மறைத்தது தொடா்பாக ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனியிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ்கனி. இந்த இரு தோ்தலின்போது அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் வித்தியாசம் உள்ளது.

தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் என்ற முறையில் வரும் வருமானத்தை தவிர வேறு வருமானம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள நவாஸ்கனி, ரூ.20 கோடிக்கு மேல் சொத்து சோ்த்துள்ளாா். வருமானத்தைக் குறைத்து காட்டியது தொடா்பாக நவாஸ்கனி மீது வருமான வரித் துறையிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கெனவே, நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நான் தாக்கல் செய்துள்ள மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வருமானத்தை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வருமான வரித் துறை மற்றும் எம்.பி.,நவாஸ்கனி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.