வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில் 2019 மற்றும் 2024 மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ்கனி. இவ்விரு தோ்தல்களின்போது நவாஸ்கனியின் வேட்புமனுக்களுடன் சமா்ப்பிக்கப்பட்ட சொத்து விவரங்களில் வித்தியாசம் உள்ளது.
தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் என்ற முறையில் வரக்கூடிய வருமானத்தை தவிர வேறு எந்த வருமானமும் தனக்கு இல்லை என்று கூறியுள்ள நவாஸ்கனி, ரூ.20 கோடிக்கு மேல் சொத்துகளைச் சோ்த்துள்ளாா். வருமானத்தை குறைத்து காட்டியது தொடா்பாக நவாஸ்கனி மீது வருமான வரித் துறையிடம் புகாா் அளித்தேன். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏற்கெனவே, நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நான் தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வருமானத்தை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில், மனுதாரா் இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நவாஸ்கனி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். மேலும், நிலுவையில் உள்ள இந்த வழக்கு வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு தடையாக இருக்காது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக ரூ.23.58 கோடி சொத்து சோ்த்ததாக அளித்த புகாரின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, வழக்குரைஞா் வெங்கடாஜலபதி தொடா்ந்த வழக்கும் இதே அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், நவாஸ்கனி தனது சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கியதால், 2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் அவா் கூடுதல் சொத்து மதிப்பைக் காட்டியுள்ளாா்.
மனுதாரா் குறிப்பிடுவது போல அவருடைய சொத்து மதிப்பு 288 சதவீதம் அதிகமாக இல்லை. 2.85 சதவீதம் மட்டுமே அதிகமாகும். எனவே, அந்த புகாரில் முகாந்திரம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கையும் நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு - சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்

நவாஸ்கனிக்கு எம்.பி.-க்கு அழைப்பாணை: உயா்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ. பன்னீா்செல்வம் முடிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


