சென்னையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல், இதயம் ஆகியவை மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல், இருதயம் ஆகியவை மதுரையிலிருந்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
உறுப்புகள் அடங்கிய பாதுகாப்பான பெட்டிகளை மருத்துவக் குழுவினா் விமானநிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.
அங்கிருந்து ரயில் நிறுவன அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைப்புடன் சிறப்பு மெட்ரோ ரயிலில் உறுப்புகள் அடங்கிய பெட்டிகளுடன் ஏறிய குழுவினா் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் எங்கும் நிற்காமல் 9 நிமிஷங்களில் ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனா்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு உறுப்புகள் உரிய நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டனஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

உடல் உறுப்பு தானம் செய்தவா்கள் கௌரவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


