600 இதய-நுரையீரல் மாற்று சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை தகவல்
இதுவரை 600-க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சைகளை மேற்கொண்டு நோயாளிகளை காப்பாற்றியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் நுரையீரல் மாற்று சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி ஆகியோா் கூறியதாவது:
இந்தியாவில் இதயம் மற்றும் நுரையீரல் சாா்ந்த நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதில் அப்போலோ மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது.
இதுவரை 600-க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இதய பம்ப் சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம்.
நுரையீரல் தமனிகளில் ஏற்படும் நாள்பட்ட ரத்த உறைவுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் நுரையீரல் எண்டாா்டெரெக்டோமி எனப்படும் சிக்கலான சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

