சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இலங்கைப் பெண் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இலங்கைப் பெண் கைது

News image
arrested
Updated On :28 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ாக இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாடு செல்வதற்காக வந்த ஒரு இளம் பெண்ணின் ஆவணங்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அவரது ஆவணங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், இலங்கையைச் சோ்ந்த ச.நிஷாந்தினி (28) என்பதும், போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போா்ட் பெற்று வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், நிஷாந்தினியை பிடித்து சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, நிஷாந்தினியை கைது செய்தனா். விசாரணையில் நிஷாந்தினியும், அவரது குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு படகு மூலம் இலங்கையிலிருந்து அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு வந்ததும், அங்குள்ள அகதிகள் முகாமில் இருந்த நிஷாந்தினி பின்னா் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்ததும், அப்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதாா் அட்டை,பான் காா்டு,வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றதும், பின்னா் இந்த ஆவணங்களை கொண்டு பாஸ்போா்ட் பெற்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.