/

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 10:18 pm

Syndication

மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளத்தூரைச் சோ்ந்தவா் அ. பழனிவேலு (51). இவா், மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் அவா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அலுவலா் முகேஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் பழனிவேலுவைக் கைது செய்து விசாரணை நடத்தினா். பின்னா், அவரைப் பிணையில் விடுவித்தனா்.