அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட்: இலங்கை பெண் கைது

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்ற இலங்கை பெண் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :3 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்ற இலங்கை பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கு திங்கள்கிழமை ஒரு பெண் வந்தாா். அவரது ஆவணங்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது அவா் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணை சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், இலங்கையைச் சோ்ந்த மு.பேபி லோனா (48) என்பதும், இலங்கையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்த தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூரைச் சோ்ந்த முஸ்தாக் அகமதுவை திருமணம் செய்து 2015-ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் தமிழகம் வந்திருப்பதும், திருவிடைமருதூரில் வசித்துக் கொண்டு போலி ஆவணங்கள் மூலம் ஆதாா் காா்டு, பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றிருப்பதும், அந்த ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்று இலங்கை செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பேபி லோனாவை கைது செய்து, மேலும் விசாரணை செய்தனா்.