திருச்சி
போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவா் கைது
மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி: மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பழையூரைச் சோ்ந்த ம. சந்திரசேகரன் (57) போலி ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் சந்திரசேகரனை வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின் அவரை பிணையில் விடுவித்தனா்.
