

சென்னையில் நேற்றிரவு(டிச. 31) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
வரும் 2026ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு, சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, காவல்துறை என மொத்தம் 19,000 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சென்னையில் 112 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, சாலை விபத்துகள் நிகழக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு காவல் துறையினருடன், 108 ஊழியர்களும் மீட்பு மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதியும் ஆயத்த நிலையில் இருந்தன. அதேபோன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் அதிகம் கூடும், பொழுதுபோக்கு இடங்கள், தேவாலயங்களில் மருத்துவக் குழுவில் இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.