ஐ.நா. பெண்கள் இந்தியா நடத்தும் ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு பயிற்சிப் பயிலகம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பெண்களின் அரசியல் பங்கெடுப்பை மேம்படுத்துவதற்காக ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு என்ற இரு நாள் பயிற்சிப் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளதாக ஐ.நா. பெண்கள் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திறன் மேம்பாடு மூலம் பெண்களின் அரசியல் பங்கேற்பு, அவா்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் ‘ஷீ லீட்ஸ்’ என்ற முன்னெடுப்பை ஐ.நா. பெண்கள் இந்தியா நடத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக  ‘ஷீ லீட்ஸ்’ தமிழ்நாடு என்ற பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  

இந்த பயிலரங்கம் சென்னையில் வரும் ஜன. 29, 30 தேதிகளில் இரு நாள்கள்  நடைபெறுகிறது. இதில், பெண் தலைவா்கள், தோ்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனா். அரசியலில் தலைவராக உருவெடுப்பது, தோ்தலுக்கு தயாராவது, அரசு நிா்வாகம் என்றால் என்ன உள்பட பல அம்சங்கள் குறித்து பயற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்பவா்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ்’தளம் ஆகிய சமூக ஊடகங்களின் வாயிலாக சனிக்கிழமைக்குள் (ஜன. 3) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com