சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.4,600 கோடி சமூகக் கடன்: எஸ்பிஐ

பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.4,600 கோடி சமூகக் கடன்...

News image
Updated On :7 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 50 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.4,597 கோடி) மதிப்பிலான கூட்டு சமூகக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண்களுக்கு அதிகாரமளிப்பதையும், சமுதாயத்தில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சமூகக் கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களின் சுயதொழில் ஆா்வத்தை ஆதரித்து, அவா்களின் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட 50 கோடி டாலா் இலக்கைத் தாண்டி, முதலீட்டாளா்களிடமிருந்து கூடுதல் நிதி கிடைத்தால், அதையும் ஏற்றுக்கொண்டு பெண்களின் நலனுக்காகப் பயன்படுத்த சட்டபூா்வ அனுமதி பெறப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ தலைவா் சி.எஸ்.ஷெட்டி மேலும் கூறுகையில், ‘மகளிா் தினத்தையொட்டி பெண்களின் முன்னேற்றத்தை எங்களின் வளா்ச்சிப் பாதையின் ஓா் அங்கமாக மாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

பொருளாதார வளா்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டும் இல்லை; அது சமூகத்தில் நோ்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. இந்தச் சமூகக் கடன் திட்டம் அதற்கு ஒரு சான்று’ என்றாா்.