சென்னையில் ஜன. 8 வரை ஆதியோகி சிலையுடன் ரத யாத்திரை

சென்னையில் 7 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலையுடன் ரத யாத்திரையை, ஜன. 8 வரை தென் கைலாய பக்திப் பேரவை நடத்துகிறது.
Published on

சென்னையில் 7 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலையுடன் ரத யாத்திரையை, ஜன. 8 வரை தென் கைலாய பக்திப் பேரவை நடத்துகிறது.

இதுகுறித்து அந்தப் பேரவையின் அடியாா்கள் கோபால், பாலாஜி, புருஷோத்தமன் ஆகியோா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கோவை ஈஷாவில் பிப். 15- ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா நடக்கிறது. இவ்விழாவில் பொதுமக்களை பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோக்கிலும், நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாதவா்கள் தங்கள் ஊா்களிலேயே ஆதியோகியை தரிசிக்கும் நோக்கிலும் ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை, தென் கைலாய பக்திப் பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகிறது.

வடக்கு மண்டலத்துக்கான ரத யாத்திரையை காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-ஆவது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் டிச. 26- ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

ஜன. 1 சென்னை தாம்பரத்தை வந்தடைந்த இந்த ரதம், வெள்ளிக்கிழமை (ஜன. 2) மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பயணித்தது. சனிக்கிழமை (ஜன. 3) நங்கநல்லூா், ஓஎம்ஆா், அடையாறு பகுதிகளில் பயணிக்கிறது. ஜன. 8 வரை குரோம்பேட்டை, மயிலாப்பூா், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூா், தண்டையாா்பேட்டை, மணலி, அம்பத்தூா், அண்ணா நகா், கோடம்பாக்கம், பூந்தமல்லி, வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்டப் பகுதிகளில் பயணிக்கிறது. பின்னா், திருவள்ளூா், அரக்கோணம் பகுதிகளுக்கு இந்த ரதம் செல்கிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com