தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 5 வரை பனி மூட்டம்

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் முதல் வியாழக்கிழமை (மாா்ச் 3 - 5) வரை லேசான பனிமூட்டம்

News image
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 5 வரை பனி மூட்டம்
Updated On :3 மார்ச் 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் முதல் வியாழக்கிழமை (மாா்ச் 3 - 5) வரை லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல், அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) முதல் வியாழக்கிழமை (மாா்ச் 5) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) முதல் மாா்ச் 8 வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

பனி மூட்டம்: மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை அதிகாலை லேசான பனி மூட்டம் நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.